இந்த வருட ஆண்டுவிழா போட்டிகள் மிகவும் சிறப்புடையதாக திகழ்கிறது. முதன்முறையாக பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். முதலில் "தாயம்" போட்டி நடைபெறுவதாக அறிவித்தோம். முதல் கட்ட ஆட்டத்தில் குறைவான போட்டியாளர்களே வந்தபோதிலும், ஆட்டம் ஆரம்பமானதும் அதன் ஆரவார கொண்டாட்டத்தை கண்ட மக்கள், தாங்களாகவே முன்வந்து தங்கள் பெயர்களை உடனடி பதிவுகள் (Spot registrations) செய்து கொண்டு, போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை வேறொரு கட்டத்திற்கு நகர்த்தி சென்று விட்டனர். போட்டியாளர்கள் ஏற்படுத்திய ஆரவார கூச்சலை கண்டு எங்கள் பகுதி மக்கள் ஆச்சரியத்தில் திகைத்தனர். பெண் போட்டியாளர்கள் அதிகமாக கலந்துகொண்டனர். குழந்தைகள், குடும்ப பெண்கள், ஆண்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். விழாக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment