சுற்றறிக்கை
22.03.2015
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களில் ஏரி, குளங்களும் ஆகும். இதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு மீதமுள்ள நீர் நிலைகளையாவது பாதுகாத்து பராமரிக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டுமல்லவா? எனவே, நம் அருகில் உள்ள செம்பாக்கம் ஏரியினை பாதுகாக்கும் பொருட்டு Sembakkam Civic Welfare Association னுடன் நாமும் சேர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அதில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகைளை வருகின்ற ஜூன் மாதம் முதல் வேங்கடமங்கலத்திற்கு எடுத்து செல்ல உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இவ் ஏரியில் மழை நீர் வடிகால் என்ற பெயரில் அதனுள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாக்கடையை ஏரியில் விடுகின்றனர். அதனால் கொசு, பன்றி, நாய்களின் பெருக்கத்தினால் அருகில் வசிப்பவர்களுக்கு நோய்கள் பரவும் ஆபத்துக்கள் உள்ளன. இந்த சூழலில் இப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கத்தோடு நம் அருகில் உள்ள அனைத்து சங்கங்களை ஒருங்கிணைத்து 22.03.2015 அன்று நமது நகரில் கூட்டம் கூட்டப்பட்டு நீண்ட நேரம் விவாதித்து பிறகு கீழ் கண்ட தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. செம்பாக்கம் ஏரியினை சுற்றி வசிக்கின்ற சிட்லபாக்கம், செம்பாக்கம், பல்லாவரம் பகுதி வாழ் மக்கள் இன்று அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தண்ணீருக்காக ஆழ் துளை கிணற்றில் கூட வற்றி விடும் அளவிற்கு நீர் மட்டம் குறைந்துள்ளது. சிட்லபாக்கத்தில் குழாய் மூலம் குடி நீர் விநியோகம் கடந்த ஜூன் மாதம் முதல் மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவிலும், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அதுவும் வரப்பெறவில்லை. எனவே, விலை கொடுத்து குடி நீர் வாங்கி உபயோகிக்கும் நிலையில் உள்ளோம். தற்பொழுது இந்த ஏரியில் பல்லாவரம் நகராட்சியினர் ராட்சச கிணறு எடுத்து அதிலிருந்து தண்ணீரை லாரிகளில் எடுத்து சென்று பல்லாவரத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்ய முயற்சி செய்வதற்கு முன் இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, ஆழப்படுத்தி உடைந்த கலங்களை கட்டி, பக்கத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சியின் சாக்கடை நீர் இவ் ஏரியில் கலக்காமல் தடுத்து சுத்தமான நீர் பிடிப்பு பகுதியாக மாற்றுவதற்கு முதலில் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் இச் செம்பாக்கம் எரியினை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து வழிகளிலும் நமது சங்கம் கடந்த 1998 முதல் தொடர்ந்து செயல் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. எனவே இவ் ஏரியின் கிணற்றிலிருந்து நீரை வெளியே எடுத்துச் செல்வதை தடுக்க வலியுறுத்தி நாம் சென்ற 16.03.2015 அன்று மாண்புமிகு கால்நடை துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், செயற் பொறியாளர், பொதுபணித்துறை, வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கும் நேரில் கடிதங்கள் கொடுக்கப்பட்டன. மேற்கண்ட இக்கோரிக்கைகளை சிட்லபாக்கம் பேரூராட்சி மற்றும் செம்பாக்கம் நகராட்சியினர் நமது அமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சென்று அருகில் வசிக்கும் எங்களுக்கு ஒரு நல்ல தீர்வினை செயல் படுத்த வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் இல்லாத பட்சத்தில் நமது அடுத்த கட்ட நடவிடிக்கையாக நீதி மன்றத்திற்கு சென்று நல்ல தீர்ப்பினை பெறுவதற்கு முயற்சி செய்ய இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. எனவே, சங்க உறுப்பினர்கள், பகுதி வாழ் மக்கள் தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுக்கு வருகின்ற 31.03.2015க்குள் கடிதம், அல்லது email id ssnrassociation@gmail.com மூலமாக தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
R. வெங்கட்ராமன்
தலைவர்
9445120857

No comments:
Post a Comment